யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்கள் மத்தியில் அரச புலனாய்வாளர்களால் தாக்கப்பட்டமையையும், பொலிஸாரால் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தப்பட்டமையையும் மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமாரின் தந்தையார் குமார் பொன்னம்பலம் அன்று தலைநகர் கொழும்பில் பட்டப்பகலில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்றும், அதற்கான நீதி இன்று வரை வழங்கப்படவில்லை என்றும் முன்னாள் எம்.பி. ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், தற்போது தாக்குதலுக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் முன்னாள் எம்.பி. ஸ்ரீநேசன் வலியுறுத்தியுள்ளார்.