யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையின் 3ஆம் குறுக்குத் தெரு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தனது வீட்டிலிருந்து வெளியேறிய நிலையிலேயே அவர் சடலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய தியாகராசா சந்திரதாஸ் என்பவராவார். உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவரவில்லை. மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.