கீரிமலையில் வெடிகுண்டுகள் மீட்பு!

கீரிமலையில் வெடிகுண்டுகள் மீட்பு!

editor 2

யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் காங்கேசன்துறை பொலிஸாரால் வெடிகுண்டுகள் நேற்று வெள்ளிக்கிழமை (11) கைப்பற்றப்பட்டன.

நாராயணன் சுவாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றினை சுத்தம் செய்துகொண்டிருந்த சிலர் அங்கு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் வெடிகுண்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டவை ஆர்.பி.ஜி குண்டு மற்றும் 81 mm வெடி குண்டுகளே என பொலிஸார் தெரிவித்தனர்.

Share This Article