சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களுக்கும் காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடற்பிராந்தியங்களுக்கும் மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களிலும் காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.
சில சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக் கூடும்.
மன்னார் முதல் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பிராந்தியங்களிலும் காங்கேசன்துறை முதல் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் கடல் சற்று கொந்தளிப்பாகக் காணப்படும்.
அதேநேரம் மன்னார் முதல் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 மீற்றர் முதல் 3 மீற்றர் வரையான உயரத்துக்கு மேலெழக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.