நியூசிலாந்தின் துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான வின்சென்ட் பீற்றர்ஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாட்டுக்கு வருகை
தந்துள்ளார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை அவர் தலைமையிலான நால்வர் குழு கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.
இந்தப் பயணத்தில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல
முக்கிய தலைவர்களை அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் என்று தெரியவருகின்றது.