முன்னாள் அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவருக்கு எதிராக வழக்கு!

முன்னாள் அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவருக்கு எதிராக வழக்கு!

editor 2

முன்னாள் அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கு பதிவு செய்துள்ளது.

2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்ற வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கை முதலீட்டுச்சபையின் நிதியிலிருந்து பத்திரிகைகளில் விளம்பரங்களை பிரசுரித்தமை ஊடாக 17 இலட்சத்துக்கு அதிகமான தொகையை அரசுக்கு நட்டமாக ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பகிர்வு பத்திரத்தை பதிவு செய்தது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாக பதவியேற்ற வருட பூர்த்தியை முன்னிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி 11 பத்திரிகைகளில் இலங்கை முதலீட்டு சபையின் நிதி ஊடாக பத்திரிகைகளில் மேலதிக இணைப்புகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

இதன் ஊடாக அரசுக்கு 17 இலட்சத்து 48 ஆயிரத்து 877 ரூபா 46 சதம் நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் ஊடாக ஊழல் எனும் குற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பதிவு செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிடபட்டுள்ளது.

இதற்கமைய முன்னாள் அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவருக்கு இரண்டு சந்தேக நபர்களுக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவற்காக 15 சாட்சியாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக வழக்கு பொருட்களாக 21 வழக்கு பொருட்களும் குற்ற பகிர்வு பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share This Article