ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சொந்தமான வாகனங்கள் ஏலமிடப்பட்ட போது போலியான விலை மனு கோரல் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.
அந்த வாகனங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்துள்ளமை தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்கும் எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.