உலங்கு வானூர்தி விபத்து; விசாரணைக்குழு நேரில் ஆய்வு செய்தது!

உலங்கு வானூர்தி விபத்து; விசாரணைக்குழு நேரில் ஆய்வு செய்தது!

editor 2

விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானமைக்கான காரணத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு சம்பவ இடத்தில் கள ஆய்வை முன்னெடுத்துள்ளது. 

பெல் 212 உலங்குவானூர்தி நேற்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 06 பேர் உயிரிழந்ததுடன், 06 பேர் காயமடைந்தனர். 

விபத்தில் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆறு பேரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வைத்தியர்களின் ஆலோசனையின்படி அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக விமானப் படை பேச்சாளர் குரூப் கெப்டன் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், அவர்களில் 05 பேர் சிகிச்சைகளின் பின்னர் இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்படவுள்ளதாகவும், வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. 

குறித்த உலங்குவானூர்தி விபத்தில், உயிரிழந்த அறுவரின் சடலங்களையும், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share This Article