அரச ஊழியர்களுக்கு இடைக்கால கடன் வழங்க சுற்றறிக்கை!

அரச ஊழியர்களுக்கு இடைக்கால கடன் வழங்க சுற்றறிக்கை!

editor 2

அரச ஊழியர்களுக்கு, இடர்காலக் கடன் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களை அறிவுறுத்தும் வகையில் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கை மே மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

2025 ஆம் ஆண்டு பாதீடு முன்மொழிவுகள் மூலம் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு, அரச ஊழியர்களுக்கு இடர்காலக் கடன் வழங்குவதற்கான அதிகபட்ச தொகையை தற்போதுள்ள 250,000 ரூபாவில் இருந்து 400,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article