சர்வதேச ரீதியாக இலங்கை பற்றி பேசக்கூடிய அளவில் எமது கல்வித் துறையை மாற்றியமைக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பெலவத்தையில் அமைந்துள்ள இலங்கை பரீட்சைகள் திணைக்க ளத்தின் புதிய கட்டடம் ஒன்றைத் திறக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-அடுத்த வருடம் கல்வியில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் முதல் கட்டமாக அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு பரீட்சைகள் திணைக்களம் தலைமை தாங்க வேண்டும். காத்திரமாற்ற மாற்றத்தைக் கொண்டுவரும் நேரத்தில் அதற்கான குழுவொன்றை நாம்
உருவாக்குதல் அவசியமாகும்.
எமக்கு இரண்டு சவால்கள் காணப்படுகின்றன.
தற்போது நடைமுறையிலுள்ள கல்வித் திட்டத்தின் பரீட்சைகள் நடைபெறும் அதேவேளை காத்திரமான மாற்றத்தையும் கொண்டு வரவேண்டும்.
பொறிமுறைக்கு எந்தவொரு தடையும் ஏற்படாத வண்ணமும் மாணவர்களுக்கு ஏதேனும் தடைகள் உருவாகாத வண்ணமும் அதனை செயற்படுத்த
வேண்டும்.
ஆதலால் சம்பிரதாய முறையிலிருந்து விலகி எதிர்வரும் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் வித்தியாசமாக சிந்திக்க வேண்டியுள்ளது.
இந்த நாட்டில் இதனைக் கட்டாயம் செய்ய வேண்டும்-என்றார்.