வவுனியாவில் விபத்து! பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்!

வவுனியாவில் விபத்து! பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்!

editor 2

வவுனியா மூன்று முறிப்புப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பாரவூர்தி ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்தில் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் லக்ஸ்மன் பண்டார என்ற பொலிஸ் உத்தியோகத்தரே மரணமடைந்தார்.

அவரது மரணம் தொடர்பான விசாரணையை வவுனியாபொலிஸார் மற்றும் திடீர்
மரண விசாரணை அதிகாரி க.ஹரிபிரசாத் ஆகியோர் முன்னெடுத்தனர்.

Share This Article