உள்ளூராட்சி சபைத் தேர்தல்; 18 நிறுவனங்களின் தடை நீக்கம்!

editor 2

மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதைத் தடுத்து, கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அந்த உள்ளாட்சி நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சட்டமா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் முகமது லாபர் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதேவேளை கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை மே 16 ஆம் திகதி வரை நடத்துவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (07) தடை உத்தரவு பிறப்பித்திருந்தது

மேலும் கொழும்பு மாநகர சபைக்கு மேலதிகமாக குளியாப்பிட்டிய, ஹரிஸ்பத்துவ, உடபளாத்த, பன்வில மற்றும் பாத்ததும்பர பிரதேச சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Share This Article