இன்னமும் பகையுடன் இருக்க வேண்டுமா?

editor 2

நாட்டை பாதுகாப்பதற்காக நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களை மேற்கொண்டிருந்தோம். ஆனால் தற்போது இந்தியா மாத்திரம் அல்ல முழு உலகமும் மாறி விட்டது. போராட்டம் செய்தோம் என்பதற்காக இன்னமும் பகையுடன் இருக்க வேண்டுமா? நாம் நாட்டை கட்டிக்கொடுக்கவில்லை. நாம் இந்தியாவுடன் நாட்டை காட்டிகொடுக்கும் உடன்படிக்கை செய்துள்ளதாக கூறுபவர்கள் அதனை வெளிப்படுத்த வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வலியுறுத்தினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்களால் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் பயனடைகின்றன. இலங்கையின் வரலாற்றில் அதிக சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற்ற அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இடம்பிடித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் எமக்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு கிடைக்காது எனவும் எவரும் உதவி செய்யமாட்டார்கள் எனவும் இதற்கு முன்னர் கூறின. தற்போது அனைவரும் உதவி செய்ய தயாராக உள்ளமையால் நாட்டை கட்டிகொடுப்பதாக கூறுகின்றன.இவை பைத்தியமான எதிர்கட்சிகளாகும்.

நாம் இந்தியாவுடன் காட்டிகொடுக்கும் உடன்படிக்கை எதுவும் இருந்தால் அதனை காண்பியுங்கள். நாம் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைகள் வெளிப்படையானவை. காட்டிக்கொடுத்ததாக கூறுகிறார்கள். அது உண்மையாகும்.

இதற்கு நாடு காட்டிக்கொடுக்கப்பட்ட போது அதற்காக நாம் போராடியவர்கள். முன்னாள் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ராஜபக்ஸ குடுப்த்துடன் இணைந்து மில்கோ நிறுவனத்தை இந்திய நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முயற்சித்தது. எனினும் எமது அரசாங்கம் இந்திய நிறுவனத்துடன் பேச்சுவார்தை நடத்தி அந்த தடுத்து நிறுத்தியது.

1987 ஆம் ஆண்டு இலங்கையின் வான் பரப்பை இந்தியா கைப்பற்றியது. இந்திய இராணுவத்தினர் இலங்கைக்கு வருகை தந்து எம்மை அச்சுறுத்தினர்.இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். அது நாட்டை கட்டிக்கொடுக்கும் வேலை என்பதால் நாம் அதற்கு போராடினோம்.

தற்போது இந்தியா மாறியுள்ளது. உலக நாடுகளும் மாறியுள்ளது. 1990 ஆம் ஆண்டுகளில் போராட்டங்களில் ஈடுபட்டோம் என்பதற்காக பகையுடன் இருக்க வேண்டுமா? அந்த சந்தர்ப்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. போராட்டம் நடத்தினோம்.

ஆனால் அந்த பிரச்சினை இப்போது இல்லை. அன்று எமக்கு சர்வதேசத்துடன் தொடர்பில்லை. சர்வதேசத்துடன் நாம் பொருந்தவில்லை என்றனர். தற்போது நாட்டை காட்டிக்கொடுப்பதாக கூறுகின்றனர்.அவர்கள் வங்குரோத்து நிலைமையின் உச்சத்துக்கு சென்றுள்ளனர் என்றார்.

Share This Article