நிராகரிக்கப்பட்ட 35 மனுக்களை ஏற்றுக்கொள்ள உத்தரவு!

editor 2

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறு உரிய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பிறப்புச் சான்றிதழ்களில் உள்ள குறைபாடுகளை வைத்து நிராகரிக்கப்பட்ட 35 வேட்புமனுக்களை மீள பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வேட்பு மனுக்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில் உள்ள குறைபாடுகளை வைத்து வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் ரீட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மொஹமட் லபார் தாஹீர் மற்றும் பிரியந்த ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share This Article