அரகலய ஆர்ப்பாட்டத்தின் போது தீக்கிரையாக்கப்பட்ட வீடொன்றிற்காக ராஜபக்ச ஒருவர் இழப்பீட்டைபெற்றுக்கொண்டுள்ளார் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கதெரிவித்துள்ளார்.
இது குறித்த அறிக்கையொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
செவனலகலவில் தீக்கிரையாக்கப்பட்ட வீட்டிற்காக ராஜபக்ச இழப்பீட்டினை பெற்றுக்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ள ஜனாதிபதி எனினும் விசாரணையின் போது அந்த வீடு ராஜபக்சவிற்கு சொந்தமானது இல்லை என்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த வீட்டின் காணி உரிமை வேறு ஒருவரின் பெயரில் உள்ளது, எனினும் ராஜபக்ச இழப்பீட்டை பெற்றுக்கொண்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்த அறிக்கை தனக்கு கிடைத்துள்ளதாகவும் எனினும் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.