முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் 5 மணிநேர வாக்குமூலத்திற்குப் பின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க டிரான் அலஸுக்கு ஞாயிற்றுக்கிழமை (30) அழைப்பாணை விடுக்கப்பட்டதையடுத்து திங்கட்கிழமை (31) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கி வெளியேறியுள்ளார்.