யாழில் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று விபத்து! இளைஞர் மரணம்!

யாழில் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று விபத்து! இளைஞர் மரணம்!

editor 2

யாழ்ப்பாணம் சுன்னாகம் – கந்தரோடை, பழனி கோவிலடிப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிவராசா பிரவீன் (வயது 19) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் இன்னொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் மேலும் ஒரு நபர் சிக்கிய நிலையில் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article