பூநகரி , மன்னார் ,மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
இம்மாதம் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த மூன்று பிரதேச சபைகளில் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் பணிகள் நாளை மறுதினம் நண்பகல் 12 மணியுடன் முடிவடையும்.