தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரிகளுக்கான அறிவிப்பு!

தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரிகளுக்கான அறிவிப்பு!

editor 2

தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு நியமனம் செய்தல் தொடர்பில் கல்வி அமைச்சால் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

தேசிய கல்வியியல் கல்லூரிகளில் 2020 முதல் 2022 வரையான வருடங்களில் பாடநெறிகளைத் தொடர்ந்த பயிலுனர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான தகவல்கள் நிகழ்நிலை முறைமை மூலமாகச் சேகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய teacher.moe.gov.lk ஊடாக, எதிர்வரும் 28 திகதி வரையில் குறித்த பயிலுனர் இதற்காக விண்ணப்பிக்க முடியும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் பிரகாரம், 2025.03.20 திகதி முதல் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளமான www.moe.gov.lk இற்கு பிரவேசித்து மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்

Share This Article