எரிபொருள் விநியோகத்தைக் குழப்ப முயற்சி; சட்ட நடவடிக்கை என்கிறது பொலிஸ்!

எரிபொருள் விநியோகத்தைக் குழப்ப முயற்சி; சட்ட நடவடிக்கை என்கிறது பொலிஸ்!

editor 2

எரிபொருள் விநியோக செயல்முறையைச் சீர்குலைக்கும் நோக்கில் குழுவொன்று முயற்சித்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைக்கபெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அதன்படி, குறித்த விடயம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

மேலும், எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் நோக்கில் நிலையற்ற தன்மையை உருவாக்கி, பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share This Article