2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி தெஹிவளை பகுதியில் கடத்தப்பட்டதுடன் அவர் மீது கடுமையான தாக்குதலும் நடத்தப்பட்டது.
இந்தநிலையில் 42 மற்றும் 46 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 2018ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
அத்துடன் 2017ஆம் ஆண்டு இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவின் 5 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.