ரிங்கு சிங்கின் மறக்கமுடியாத அடி.. பழிதீர்க்க தயாராகும் ஹர்திக்கின் படை.. கொல்கத்தா vs குஜராத் மோதல்

cyberiolk

கொல்கத்தா: 16வது ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்த்து நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி விளையாடவுள்ளது.

ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் கொல்கத்தா – குஜராத் அணிகள் விளையாடவுள்ளது. இந்த இரு அணிகள் கடந்த முறை மோதிய போது, உலகமே திரும்பி பார்க்கும் வகையில் கொல்கத்தா அணியின் ரிங்கு சிங் அபாரமான ஒரு இன்னிங்ஸை ஆடினார்.

நடப்பு சாம்பியனான குஜராத் அணிக்கு, அதுவொரு தன்மான பிரச்சனையாக மாறியது என்றே சொல்லலாம். இதனால் இந்த இரு அணிகள் மீண்டும் மோதவுள்ள போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை ஜேசன் ராய், நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் ஆகியோர் அபாரமான ஃபார்மில் இருக்கிறார்கள்.

ரஸ்ஸல் பேட்டில் இருந்து ரன்கள் வரும் பட்சத்தில் கேகேஆர் அணி அச்சுறுத்தலான அணியாக இருக்கும். அதேபோல் காயத்தில் இருந்து ஷர்துல் தாக்கூர் மீண்டுள்ளதால், உமேஷ் யாதவிற்கு பதிலாக களமிறக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. பவுலிங்கை பொறுத்தவரை வருண் சக்கரவர்த்தி, சுயஷ் சர்மா மற்றும் சுனில் நரைன் கைகளில் தான் கேகேஆர் அணியின் தலையெழுத்து உள்ளது. மறுபக்கம் குஜராத் அணி வழக்கம் போல் கடப்பாரை அணியாக வலம் வருகிறது.

பேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா களமிறங்க தொடங்கியுள்ளதால், 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தாலும் அசராமல் சேஸ் செய்யும் என்று பார்க்கப்படுகிறது. முகமது ஷமி பந்துவீச்சில் ரன்கள் அடிக்க முடியாததால், ரஷித் கான் ஓவரில் ரன்கள் சேர்க்க முயன்று அணிகள் விக்கெட் கொடுத்து வருகிறார்கள். கேகேஆர் அணி இதற்கு என்ன மாற்று திட்டத்தை வைத்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை பொறுத்தவரை 3 போட்டிகளில் 4 முறை 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டமும் ஹை ஸ்கோரிங் த்ரில்லராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல் ஆட்டத்தில் சுழலுக்கு சாதகம் இருக்கும் என்பதால், இரு அணிகளின் சுழற்பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகளே வெற்றியை தீர்மானிக்கும். அதேபோல் ரிங்கு சிங் மீண்டும் ஒரு மாயாஜாலம் நிகழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது

Share This Article