எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு வருமாறு தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு (ரெலோ) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ்க் கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இது குறித்து தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறுவதால் தான் கொழும்பில் நிற்பதாகவும் குறித்த திகதி ஒன்றில் இந்தக் கலந்துரையாடலை நடத்தலாம் எனவும் பதில் வழங்கியுள்ளார்.
ஏற்கனவே சங்கு சின்னத்தில் கூட்டிணைந்துள்ள ரெலோ கட்சியினை அந்தக் கூட்டணியில் இருந்து உடைத்து பிரித்தாளும் தந்திரத்துடன் தமிழரசுக்கட்சி செயற்படுவதையே இந்த நடவடிக்கையை தாம் பார்ப்பதாக தமிழ்த் தேசிய ஜனநாயகக் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.