தப்பி ஓடிய படையினர் அனைவரும் கைதாகின்றனர்!

தப்பி ஓடிய படையினர் அனைவரும் கைதாகின்றனர்!

editor 2

முப்படைகளிலிருந்து தப்பியோடிய சகலரையும் கைதுசெய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு நிலை எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.

ஆயுதப் பயிற்சி பெற்று முப்படைகளிலிருந்து தப்பியோடிய பலர் குற்றக் குழுக்களுடன் இணைந்துள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகப் பாதுகாப்பு செயலாளர் அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்தார்.

இந்தநிலையில், நாட்டில் அண்மைய காலங்களில் பதிவான பல குற்றச்சம்பவங்களுடன் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களில் பலர் தொடர்புப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், முப்படைகளிலிருந்து தப்பியோடியவர்களைக் கைது செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு நிலை எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.

Share This Article