உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் நேற்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால்
நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலத்துக்கு இரண்டாவது வாசிப்பில் 187 எம். பிக்களும் மூன்றாவது வாசிப்பில் 158 எம். பிக்களும் வாக்களித்தனர்.
இதேசமயம், எதிராக எந்த வாக்குகளும் பதிவாகவில்லை இந்த சட்டமூலம் நிறைவேறியதன் மூலம் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்களை கோர முடியும். இதற்கான ஏற்பாடுகளை இந்த சட்டமூலம் கொண்டுள்ளது.
பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேறியதைத் தொடர்ந்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அதற்கு ஒப்புதல் அளித்தார்.