இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளதால், அந்த
முறையை செயல்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை என்று நீதி பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் பணியை சுமார் 8 மாதங்களில்
தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஏற்கனவே ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர்
மேலும் கூறியுள்ளார்.
இதேநேரம், 10 இலட்சம் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.