ரணில் – மைத்திரி சந்திப்பு!

ரணில் - மைத்திரி சந்திப்பு!

editor 2

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, மகிந்த அமரவீர, நிமால் சிறிபால டி சில்வா, உதய கம்மன்பில, நிமல் லான்சா, ராஜித சேனாரத்ன, ருவான் விஜேவர்தன, சாகல ரட்நாயக்க உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாகவும் எதிர்வரும் நாட்களில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

பேச்சு எதுவும் நடத்தவில்லை எனவும், நட்பு ரீதியான கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா
தெரிவித்தார்.

Share This Article