மின்துண்டிப்பு; நட்டம் தொடர்பில் மதிப்பிட நடவடிக்கை!

மின்துண்டிப்பு; நட்டம் தொடர்பில் மதிப்பிட நடவடிக்கை!

editor 2

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நட்டம் தொடர்பில்
மதிப்பீடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்-

மின்சக்தி அமைச்சும்,இலங்கை மின்சார சபையும், மின்சார சபையின் பொறியிய
லாளர் சங்கமும் மின் வெட்டு தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளன. மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையற்ற தன்மை தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பிரச்னைகள் ஏற்படும் போது அவற்றுக்கு நிரந்த தீர்வை வழங்குவதற்கு உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. குறுகிய கால
நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மின் தடையால் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் இதுவரை மின்சார சபை எவ்வித அறிக்
கையையும் சமர்ப்பிக்கவில்லை.

நட்டம் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன-என்றார்.

Share This Article