அம்பாறை – நிந்தவூர் காவல் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தென்னை மரத்திலிருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
நிந்தவூர்-8 அல்மினன் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் இளைஞர் இன்று விடுமுறை தினம் என்பதால், தேங்காய் பறிப்பதற்குச் சென்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேதப் பரிசோதனை நடவடிக்கைக்காக நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நிந்தவூர் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.