சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டல் விடுத்துள்ளார் என கொழும்பில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்று பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை அந்த ஊடகம் வெளியிட்ட
செய்தியில்- சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவை தனது பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். அவர் பதவி விலகவில்லை என்றால், பதவி நீக்க விசாரணை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் சில நாட்களில் சட்டமா அதிபர் பதவி விலகாது விட்டால், அவரை வெளியேற்றும் திட்டங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று முன்தினம் சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க மற்றும் குற்றப் புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து
கலந்துரையாடியதை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சண்டே லீடர் வார ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில் மூன்று பிரதிவாதிகளை விடுவிக்க சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க பரிந்துரைத்தமை தொடர்பாக சமூக மட்டத்தில் விவாதம் எழுந்துள்ள சூழலில், சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவை ஜனாதிபதி கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.
சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவும் இதற்கான காரணங்களைக் கூறி
யுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்
கவின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக
நபர்கள் குறித்து சட்டமா அதிபரிடம் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சட்டமா அதிபர் பதிலளிக்கையில்-
கேள்விக்குரிய வழக்கு கொலைக்கு காரணமானவர்கள் தொடர்பான வழக்கு அல்ல, மாறாக தகவல்களை மறைப்பது தொடர்பான வழக்கு. இது குறித்த தகவல்களை குற்றப் புலனாய்வுத்துறையிடம் சமர்ப்பிக்க முடிந்தால், புதிய வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்று அவர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தொடர்புடைய விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில்,
விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளின் சாட்சியங்களை மீண்டும் எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால், அவர்களை மீண்டும் அழைக்கத் தயாராக இருப்பதாக சட்டமா அதிபர் கூறியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக சமூகத்திலும் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய சூழ்நிலையை விளக்கிய ஜனாதிபதி, சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேலும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.