டயனா கமகேவை கைது செய்வதற்கான பிடியாணை மீளப்பெறப்பட்டது!

டயனா கமகேவை கைது செய்வதற்கான பிடியாணை மீளப்பெறப்பட்டது!

editor 2

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து ஆஜர்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டயனா கமகே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையானதைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணையை மீளப் பெற உத்தரவிட்டுள்ளது

செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்தது மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் தவறான அறிக்கைகளை வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டயானா கமகே மீது குற்றப் புலனாய்வுத் துறை 07 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share This Article