அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் கடந்த (2) இரவு இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
6 பேர் கொண்ட குழு வீடொன்றிற்கு நுழைந்து அங்கிருந்த மூன்று பேரை வெட்டிக் கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த (02) இரவு 07.30 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர்கள் 29, 34 மற்றும் 45 வயதுடையவர்களாவர்.
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஏனைய இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.