ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பங்கள் இன்று திங்கட்கிழமை (27) முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்த விண்ணப்பங்களானது பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்களை ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.