யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில், 15ஆவது ஆண்டாக நடைபெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ‘பொருளாதார முன்னேற்றத்துக் கான வடக்கின் நுழை வாயில்’ எனும் தொனிப் பொருளுடன் முற்றவெளி மைதானத்தில் நேற்றுக் காலை 11 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தியோகபூர்வமாக கண் காட்சியை திறந்துவைத்தார்.
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் 350இற்கு மேற்பட்ட காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட் டுள்ளன. விவசாயம், தொழில்நுட்பம், விருந்தோம்பல், கல்வி, உணவு , நவநாகரிகம் மற்றும் இதர தொழில்துறைகள் என பல்வேறுபட்ட வர்த்தக நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
40 வரையான சிறிய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்காக 10 காட்சிக்கூடங்கள் அமைப்பதற்கான இலவச இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மாலைவேளை சிறுவர்களை மகிழ்ச்சியூட்டும் நோக்குடன் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு களியாட்ட நிகழ்வுகளும் இம்முறை விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.