யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக முன்றலில் நேற்று முதல் மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் மாணவர்கள் தெரிவிக்கையில்-
கடந்த மே மாதம் விஞ்ஞான பீடமாணவர்களின் கற்றல் மண்டபத்தில் மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது , மாணவர்களை மண்டபத்தினுள் வைத்து விரிவுரையாளர் ஒருவர் பூட்டியவேளை விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத் தலைவர் மண்டப கதவைத் திறந்து மாணவர்களை வெளியேற்றி இருந்தார்.
கதவு பூட்டை உடைத்தே திறந்ததாக குற்றம் சாட்டி அவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது.
அதுபோன்று பல்கலைக்கழத்தினுள் இருந்த ஐந்து கல்லாசனங்களை உடைத்து எறிந்தமை தொடர்பில் கலைப் பீடாதிபதியிடம் கேள்வி எழுப்பிய மாணவர்கள் ஐவருக்கும் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை புதுமுக மாணவர்கள் தமது வட்ஸ் அப் குழுவில் பல்கலைக்கழகத்தில் தாம் விரும்பும் பாடங்களை கற்க அனுமதிக்கவேண்டும் என கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்றும், கோரிக்கையை ஏற்க தவறினால் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அவர்களின் குழுவில்
கலந்துரையாடியுள்ளனர்.
அவ்வாறு கலந்துரையாடிய மாணவர்கள் இருவருக்கும் வகுப்புத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதுமுக மாணவர்களுக்கான முதல் நாள் விரிவுரைகள்
கடந்த திங்கட்கிழமையே ஆரம்பமாகின. மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் கற்றல் நடவடிக்கைக்கு வரமுதலே அவர்களுக்கு வகுப்பு தடை
விதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக முதல் நாள் விரிவுரை என்பது மாணவர்களுக்கு முக்கியமான நாளாகும். அந்த நாளில் வகுப்பு தடைவிதிக்கப்பட்டு பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மாணவர்களின் நலன் சார்ந்து பேச வேண்டிய பல்கலைக்கழக மூதவையோ, பேரவையோ கடந்த 08 மாதங்களுக்கு மேலாக தொடரும் இந்த மாணவர்களின் பிரச்னை தொடர்பில் எந்த கரிசனையும் கொள்ளவில்லை என்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், மூதவை மற்றும் பேரவை ஆகியவை முடங்கியுள்ளமை வேதனையை ஏற்படுத்தி உள்ளது என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாணவர்கள் மீதான பழிவாங்கல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி குறித்த உண்ணாவிரதப் போராட்டமானது மாணவர்களினாமுன்னெடுக்கப்படுகின்றது.
அதன்படி விதிகளுக்குப் புறம்பாக நடை பெறும், நடைபெற்ற மாணவர்கள்
மீதான விசாரணைகளை உடன் நிறுத்து!
- போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்
களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்! - விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி
விசாரணை செய்! - மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்து – மாணவர்
களுக்கு உடனடி நிவாரணம் வழங்கு, உள்ளிட்ட கோரிக்கைகளை முன்
வைத்து தீர்வு கிடைக்கும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.