அரசாங்கம் வழங்கிய இல்லத்தை ஏற்க மறுத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆடம்பர உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களினால் அரசாங்கத்துக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அரசாங்கம் வழங்கிய
வீட்டிலேயே வசிப்பதாகவும், அந்த வீட்டின் மாதாந்த வாடகை பெறுமதி 2 மில்லியன் ரூபாய் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுக்கு 0.9 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த வசிக்கும் வீட்டின் வாடகை பெறுமதி மாதம் 4.6 மில்லியன் என்றும் ஜனாதிபதி கூறினார்.
எனினும் சில தலைவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை மீள ஒப்படைத்துள்ளதாக அநுரகுமார தெரிவித்தார்.
அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தனது உத்தியோகபூர்வ இல்லத்தை சமீபத்தில் மீளக் கையளித்துள்ளார் எனவும், ரணசிங்க பிரேம
தாஸவின் மனைவியான ஹேமா பிரேமதாஸவும் தனக்கு வழங்கப்பட்ட வீட்டை சில காலத்துக்கு முன்னர் திருப்பி ஒப்படைத்துள்ளார் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.