உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு!

editor 2

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்
தொடர்பாக ஒருவார காலப்பகுதிக்குள் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் ஊடக மொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவை முழு வீச்சில் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் பற்றிகருத்து தெரிவித்த ஜனாதிபதி, அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜைஎன்பதால் அவரை இலங்கைக்கு அழைத்து வருவது கடினமாகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் இந்த விவகாரத்தின் பாரதூரத் தன்மையை சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்தி, அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

Share This Article