பொலிஸாருக்கு இடையூறு; அர்ச்சனா எம்பி மீது சட்ட நடவடிக்கை!

பொலிஸாருக்கு இடையூறு; அர்ச்சனா எம்பி மீது சட்ட நடவடிக்கை!

editor 2

அனுராதபுரத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா இராமநாதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

அவருக்கு எதிராக, தண்டனைக் கோவை சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் வைத்து நேற்று அதிகாலை இராமநாதன் அர்ச்சுனா பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக அவரது வாகனத்தை நிறுத்திய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கடுஞ்சொற்களைப் பிரயோகித்திருந்தார். 

சம்பவ இடத்தில் அர்ச்சுனா போக்குவரத்து விதிகள் மற்றும் தண்டனைக்கோவைச் சட்டத்தில் 22 ஆம் சரத்தின் கீழும் குற்றம் இழைத்தவர் என உறுதியாகி இருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். 

இதனடிப்படையில், அனுராதபுரம் பொலிஸார் நீதிமன்றுக்கு விளக்கமளித்து அதனடிப்படையில் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article