முல்லைத்தீவு விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி, தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் மற்றும் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினர்.
தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழுவினர் துயிலும் இல்ல காணி விடுவிக்க கோரி, அண்மையில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.
அதன் தொடர்ச்சியாக சேகரிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்து 500 பேரின் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரை அரசாங்கத்துக்கு கையளித்து காணியை
விடுவிக்க கோரும் முகமாகவும் சந்திப்பை மேற்கொண்டனர்.
இச்சந்திப்பு, யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் ஆளுநர் ஆகியோருக்கான மகஜர்கள் கையளிக்கப்பட்டன.