யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.
குருநகரைச் சேர்ந்த இருவரும் பூநகரி மற்றும் மன்னாரை சேர்ந்தவர்களாக நால்வரும் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் பரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.