நாட்டின் சில இடங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அந்தவகையில், கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மலைகளின் கிழக்கு சரிவுகள் மற்றும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.