கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த நாட்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால், இன்று நடைபெறவிருந்த தேர்வு பாடங்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.