யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்தை ‘திருவள்ளுவர் கலாசார மையம்’ என்று பெயர் மாற்றிய இந்திய – இலங்கை அரசாங்கங்கள்!

யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்தை ‘திருவள்ளுவர் கலாசார மையம்’ என்று பெயர் மாற்றிய இந்திய - இலங்கை அரசாங்கங்கள்!

editor 2

இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு ‘திருவள்ளுவர் கலாசார மையம்’ என இன்று சனிக்கிழமை (18) பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

திருவள்ளுவரைக் கௌரவிக்கும் வகையில் குறித்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி, யாழ் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share This Article