தொடரும் கடும் மழையால் முல்லைத்தீவு மாவட்டம் முத்தையன் கட்டுக் குளத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
இரண்டு வான் கதவுகளும் இன்று (14) இரவு 10.00மணிக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நீரேந்து பகுதிகளுக்கு நெருக்கமாக வாழும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.