தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் இரணைமடு நீர்த்தேக்கத்தின் நான்கு கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதே நேரத்தில் கனகம்பிகை மற்றும் கல்மடு குளங்களும் வான் பாய்கின்றன. மக்கள் விழிப்புடன் இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.