இலங்கையில் பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் செயலிழக்கின்றன!

Editor 1

கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்வதற்கு வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, தங்களது ஆணைக்குழுவில் IMEI இலக்கத்தைப் பதிவு செய்யாத கைத்தொலைபேசிகளில் குறித்த கால அவகாசத்தின் பின்னர் தொலைபேசி வலையமைப்பு இயங்காது என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர்  IMEI  இலக்கத்தைப் பதிவு செய்தவர்களுக்கு எந்தவித சிக்கலும் ஏற்படாது எனவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஸ்டார் லிங்க் சேவைக்கு உரித்தான  தொலைத்தொடர்பு பொதிகளுக்கான கட்டணங்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Share This Article