திருட்டுச் சம்பவம்; மருதங்கேணியில் ஒருவர் கைது!

editor 2

திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் மருதங்கேணி பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி – குடத்தனை, மாளிகைத்திடல் பகுதியை சேர்ந்த நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனம் ஒன்றின் சொத்துக்கள், ஆவணங்கள், தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை திருடிய குற்றச்சாட்டின் பேரிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ய சென்ற போது சந்தேக நபர் பொலிஸாரை தாக்கி தப்பிச் செல்ல முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை மருதங்கேணி பொலிஸார் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.

Share This Article