யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் வன்முறைக் கும்பல் ஒன்றின் 10ஆவது ஆண்டு நிறைவை யொட்டி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காணொளியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவாலி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனே இவ்வாறு மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.