தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானி நியமனம்!

editor 2

மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வுபெற்ற) இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய (ஓய்வுபெற்ற) தனது நியமனக் கடிதத்தை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தவிடமிருந்து (ஓய்வு) புதன்கிழமை (01) பெற்றுக்கொண்டார்.

அதனையடுத்து, மேஜர் ஜெனரல் வணிகசூரிய (ஓய்வுபெற்ற) நேற்று ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் உள்ள தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

Share This Article