வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட ஐவரை
பொலிஸார் கைது செய்தனர்.
திறந்த பிடியாணையின் கீழ் ஒருவரையும், திகதியிடப்பட்ட பிடியாணையின் கீழ் நால்வர் என ஐவரை பொலிஸார் இவ்வாறு கைது செய்ததுடன் அவர்களை வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.